…நிழல்கள்…

செப்ரெம்பர் 24, 2011

நச்சுச் சுழல்

முன் குறிப்பு: நச்சுச் சுழல்vicious circle – a chain of events in which the response to one difficulty creates a new problem that aggravates the original difficulty —called also vicious cycle. 

நான் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் உதவி மேலாளரிடம் தொலைபேசியில், “சார், நான் இப்ப இருக்கற வீட்டில் இருந்து வேற வாடகை வீட்டுக்குப் போறேன். என்னோட account-ல இருக்கற correspondence address-சை மாத்தணும். அதுக்கு என்ன செய்யணும்?”

உதவி மேலாளர்: “அது ரொம்ப simple procedure சார். Subject-ல ‘Change of Address’-ன்னு போட்டு, உங்க Customer ID number, Account number, இப்பத்து address, மாத்திப் போகப் போற address எல்லாத்தையும் mention பண்ணி ஒரு letter கொடுங்க, four to five working days-ல Head Office-லர்ந்து உங்களோட புது address-க்கு ஒரு acknowledgement letter வந்துரும்.”

நான்: “Ok, சார். Address proof எதாச்சும் கொடுக்கனுமா?”

உ.மே.: “ஓ! ஆமாம் சார். சொல்ல மறந்துட்டேன். புது address இருக்கற ration card, telephone bill அல்லது gas connection book, மூணுல எதோ ஒன்னோட Xerox copy attach பண்ணீருங்க.”

நான்: “சார், இப்பதான் வீடு confirm பண்ணியிருக்கேன். அடுத்த வாரம்தான் shift பண்ணப் போறேன். இன்னும் எதுவுமே அந்த address-க்கு மாத்தலையே. Bank account-லேர்ந்து ஆரம்பிக்கலாம்னு பார்த்தேன்…”

உ.மே.: “ஐயோ, சாரி சார். அப்டி பண்ணமுடியாது. நான் சொன்ன மூணுல ஏதாச்சும் ஒன்னாவது கொடுத்தாத்தான் official-லா ‘change of address’ பண்ண முடியும்.”

நான்: “சார், மூணு வருஷத்துக்கு முன்னால உங்க branch-ல account open பண்றப்ப இவ்ளோ strict-ஆ proof எல்லாம் யாரும் கேக்கலியே?”

உ.மே.: “சார், அப்ப இந்த ஊர்ல புதுசா எங்க bank நுழைஞ்ச time. Over strict பண்ணினா account சேர்க்கறது கஷ்டம்னு எங்க marketing மக்கள் கொஞ்சம் லூஸ்ல விட்டிருப்பாங்க. இப்ப அப்படி முடியாது சார், ரொம்ப சாரி. நீங்க வேணா ஒன்னு பண்ணுங்களேன். Gas connection easy-யா மாத்திறலாம், அதை மாத்தீட்டு எங்களை approach பண்ணுங்க, நான் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, ‘address change’ பண்ணிக் கொடுக்க personal-ஆ ஏற்பாடு பண்றேன்.”

நான்: “Ok சார். Thanks. Gas connection மாத்தீட்டு உங்களை மறுபடியும் contact பண்றேன்.”

சமையல் எரிவாயு விநியோக அலுவலகத்திற்கு பத்து முறைக்கும் மேல் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்று, தொடர்ச்சியாக அவர்களின் இரண்டு தொலைபேசி எண்களும் பயனில் இருந்ததால் தொடர்பு கொள்ள முடியாமலும், பொறுமை இழந்தும் விட்டு விட்டேன். ஓரிரு மணி நேரம் கடந்து மறுபடியும் முயன்ற பொழுது உடனடியாகத் தொடர்பு கிடைத்தது.

“Consumer number-உம், பெயரும் சொல்லுங்க சார்,” என்று எடுத்தவுடன் தொலைபேசியில் பேசிய பெண்மணியிடம் நான், “Madam, நான் gas book பண்றதுக்காக கூப்பிடலை. என்னோட வீட்டு address மாறப் போகுது, அதுக்கு என்ன formality செய்யனும்னு கேக்கலாம்னு கூப்பிட்டேன்,” என்றேன்.

“சார், booking மட்டும்தான் phone-ல பண்ணமுடியும். Address மாத்தறதுக்கு நீங்க office-க்கு நேர்ல வரணும். வரும்போது gas connection book-ம் கடைசியா cylinder வாங்கின ரசீதும் எடுத்துட்டு வாங்க,” என்று பொறுமையே இல்லாமல் அவசரமாகச் சொன்னவர் இணைப்பைத் துண்டிக்கும் முன் நான் குறுக்கிட்டு, “Madam, address proof ஏதாச்சும் கொடுக்கனுமா?” என்று கேட்டேன்.

சற்றே எரிச்சலுடன், “Proof இல்லாம எப்டி சார் address மாத்திக்கொடுப்போம்? Ration card, இல்லாட்டி phone bill கொண்டுவாங்க, பாத்துக்கலாம்,” என்று சொன்னவரை குறுக்கிட்டு மறுபடியும் கேள்வி கேட்கும் தைரியம் இல்லாமல் “தேங்க்ஸ் மேடம்,” என்று சொல்லி வைத்துவிட்டேன்.

சொந்த ஊரில் பெற்றோர் வீட்டில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்த ஊருக்கு தனியாக குடி வந்த போது புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து, அது கிடைக்கும் வரை அவதிப்பட்டது இன்னும் நினைவில் மலர்ந்து இருந்ததால், அந்த அட்டையில் முகவரி மாற்றுவதை கடைசியாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று முதலில் முடிவு செய்தது நடக்காது போலிருக்கிறதே என்று நொந்து கொண்டேன்.

மறுபடியும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று துன்பப் படுவதற்கு முன் இருக்கும் ஒரே மாற்று வழியையும் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்துடன் தொலைபேசி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். ஏற்கனவே இரண்டு இடங்களில் பட்ட அனுபவம் இருந்ததால் நேரடியாக கேட்டுவிடலாம் என்று ஆயத்தமாக இருந்தேன்.

“சார், நான் அஞ்சு வருஷமா உங்க company landline-தான் use பண்ணிக்கிட்டிருக்கேன். இப்ப வீடு shift பண்றேன், phone shift பண்றதுக்கு address proof என்ன கொடுக்கணும் சார்?,” என்று கேட்டேன்.

சற்றும் தாமதமில்லாமல் பதில் வந்தது, “Ration card, இல்லாட்டி gas connection book. ரெண்டுல எதோ ஒன்னு xerox copy-யோட புது address mention பண்ணி ஒரு letter கொடுங்க சார், maximum 3 days time-ல மாத்திக் கொடுத்துருவோம்.”

நன்றி சொல்லிவிட்டு பெருமூச்சுடன் தொலைபேசியை வைத்தேன். இனி வேறு வழி இல்லை, குடும்ப அட்டையில்தான் முகவரியை மாற்ற வேண்டும்.

அடுத்த நாள் காலை வட்டாட்சியர் அலுவலகத்திற்குப் போய் அங்கே உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் (Taluk Supply Office) இருந்த எழுத்தரிடம் விவரம் கேட்டேன்.

எழுத்தர்: “சொந்த வீடா, சார்?”

நான்: “இல்லைங்க சார், இப்ப இருக்கறதும் வாடகை வீடு, போகப் போறதும் வாடகை வீடுதான்.”

எ: “ஓ! அப்ப சொத்து வரி ரசீதெல்லாம் இருக்காது. சரி, புதுசா போகப் போற வீட்டு address-க்கு வேற ஏதாவது proof வச்சிருக்கீங்களா?”

நான்: “சார், அது இல்லைன்னுதான் இப்ப ration card-ல address மாத்திக்கலாம்னு உங்ககிட்ட வந்திருக்கேன்.”

எ: “சார், எங்க rules படி adress proof-க்கு voter ID, சொத்து வரி ரசீது, EB bill, phone bill, bank passbook, இல்லாட்டி gas connection book, ஏதாவது proof வேணும் சார். நீங்க ஒன்னு பண்ணுங்க, gas connection easy-யா மாத்தீறலாம், அதுல மாத்தீட்டு வாங்க, அதை வச்சு ஒரே நாள்ல ration card-ல மாத்திக் கொடுத்துடறேன்.”

எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.

பின் குறிப்பு: தூய தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும். நடந்ததை நடந்தபடியே பதிக்கவேண்டும் என்று எனக்கு தோன்றியதால் பேச்சு வழக்கில் உள்ள ஆங்கிலம் கலந்த தமிழிலேயே எழுதினேன்.

Advertisements

9 பின்னூட்டங்கள் »

 1. நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் வழங்கும் முகவரி சான்றிதழ் , கடவுச்சீட்டுக்கே செல்லுது..இதுக்கும் செல்லபடியாகும்…

  பின்னூட்டம் by TPKD / TBCD (@TPKD_) — செப்ரெம்பர் 24, 2011 @ 12:51 பிப | மறுமொழி

  • “வேலை செய்யும் நிறுவனம் வழங்கும் முகவரி சான்றிதழை”த்தான் கடைசி ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கிறேன். நிறுவனம் கணக்கில் சம்பளம் செலுத்தும் வங்கியில் அதைக் கொடுத்து, கேட்டு/கெஞ்சி/மிரட்டி கணக்கு புத்தகத்தில் முகவரியை மாற்றி மறுபடியும் வட்டமடிக்கவேண்டும்.

   பின்னூட்டம் by Vijay — செப்ரெம்பர் 24, 2011 @ 1:00 பிப | மறுமொழி

 2. Excellent post! நம்மூரில் மிகப் பெரியப் பிரச்சனை இது. வீட்டு சொந்தகாராரிடம் போட்ட வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை வைத்து முயற்சி பண்ணலாம். அதில் முகவரி இருக்கும். So many would have experienced this torture 🙂
  amas32

  பின்னூட்டம் by amas32 — செப்ரெம்பர் 24, 2011 @ 1:00 பிப | மறுமொழி

 3. கொடுமை! இவங்க யாருகிட்டயாவது கொஞ்சம் கத்திப் பாத்திருக்கலாமே? நீங்க திட்டமிட்ட மாதிரிதானே எழுதிருக்கீங்க? அப்புறம் பின்குறிப்பு எதுக்குங்க? 🙂

  பின்னூட்டம் by சாத்தான் (@mislexic) — செப்ரெம்பர் 24, 2011 @ 1:01 பிப | மறுமொழி

  • முன்குறிப்பு, பின்குறிப்பு எல்லாம் இல்லாம பதிவு போடக்கூடாதுன்னு சபதம் எடுத்திருக்கேனாக்கும். 😉

   பின்னூட்டம் by Vijay — செப்ரெம்பர் 24, 2011 @ 1:07 பிப | மறுமொழி

 4. சென்னையிலிருந்து, சேலத்திற்கு என் தகப்பனாரின் வீட்டிற்கு மாற்றல் செய்து வர இருக்கிறேன். நான் எந்த நிருவனத்திலும் வேலை செய்பவனும் கிடையாது. சுயதொழில் செய்பவன். இந்த விஷயத்தில் என்ன செய்ய போகிறேனோ தெறியவில்லை.

  பின்னூட்டம் by வாசு வெங்கட் — செப்ரெம்பர் 24, 2011 @ 2:12 பிப | மறுமொழி

  • உங்கள் தகப்பனார் பெயரில் உள்ள குடும்ப அட்டையில் உங்கள் பெயரும் இருந்தால், உங்கள் பெயரில் புதிய குடும்ப அட்டை வாங்குவது சுலபம். அதை வைத்து புது சமையல் எரிவாயு இணைப்பு வாங்கலாம் அல்லது இருக்கும் இணைப்பிற்கு முகவரி மாட்றலாம்.

   பின்னூட்டம் by Vijay — செப்ரெம்பர் 24, 2011 @ 2:30 பிப | மறுமொழி

 5. கொடுமை. முட்டாள்தனமாகவும் இருக்கிறது. குடும்ப அட்டையை பிரதான (பெரும்பாலும்) அடையாள நிரூபணமாகக் கொள்ளும் நடைமுறை எரிச்சலையே உண்டுபண்ணுகிறது. தேவையற்ற நடைமுறைகளால்தான் எதிலும் உருப்படாமல் இருக்கிறோம்.

  பின்னூட்டம் by Radhakrishnan — செப்ரெம்பர் 24, 2011 @ 2:26 பிப | மறுமொழி

 6. வாடகை வீடெனில் வாடகை ஒப்பந்தம், சொந்த வீடெனில் possession certficate இதிலிருந்து ஆரம்பிப்பது நலம்.

  பின்னூட்டம் by msathia — செப்ரெம்பர் 26, 2011 @ 11:22 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: