…நிழல்கள்…

ஜூன் 16, 2010

உலக நாயகன் – 1

Filed under: கதை,மருத்துவம்,Fiction,Medicine,Tamil — Vijay @ 10:11 முப

நர்ஸ் அவசரமாக எடுத்து வந்த அந்தக் குழந்தையைப் பார்த்ததும் டாக்டர் ரமேஷுக்கு இது பிழைப்பது கஷ்டம் என்று தோன்றியது. இந்த மருத்துவமனையில் பச்சிளம்குழந்தைகள் நிபுணராக1 ரமேஷ் வேலைக்கு சேர்ந்தபின் அவர் பார்த்ததிலேயே சிறிய குழந்தை இதுதான். நர்ஸ் குழந்தையை warmer-இல்2 கிடத்தியதும், ஆக்சிஜன் அளிக்கும் கண்ணாடிப் பெட்டியை3 குழந்தையின் தலையை முழுவதுமாக மூடும்படி பொருத்திவிட்டு, உச்சிமுதல் பாதம் வரை பார்வையை ஒட விட்டார்.

குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கே உரிய குட்டிக் குரங்கு பொன்ற பெரிய தலை, சுருங்கிய முகம். தலையில் இருந்த சில முடிகள் தோலுடன் ஒட்டிக்கொண்டிருந்தன. கண்களை இறுக்கி மூடிக்கொண்டு சிறிய சிவந்த வாயை திறந்து பூனையைப்போல் முனகிக்கொண்டிருந்தது. காதுகள் மண்டையோடு ஒட்டியிருந்தன. உடலை சுற்றியிருந்த மருத்துவமனை பச்சைத் துண்டை அகற்றினார் ரமெஷ்.

ஆண் குழந்தை. எலும்பும் தோலுமாக வற்றிய உடல். விலா எலும்புகள் விரிய வேகமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தது. இடது நெஞ்சில் வேகமான இதயத் துடிப்பின் அதிர்வு தெரிந்தது. கை, கால், விரல்கள் எல்லாம் இருக்கவேண்டிய அளவில், இருக்கவேண்டிய இடங்களில் இருந்தன. வெட்டப்பட்ட தொப்புள் கொடியில் பொறுத்தியிருந்த க்ளிப் சரியாக இருந்தது. ரத்தக் கசிவு எதுவும் இல்லை. Vernix4 அதிகமாக இல்லை, இருந்த அளவிற்கு சுத்தமாக வெள்ளையாக இருந்தது, இது குழந்தையை துடைத்ததாலும் இருக்கலாம் என்று மனதில் எண்ணிக்கொண்டே நர்ஸிடம், “என்னம்மா history5,” என்று கேட்டார் ரமெஷ்.

குழந்தையின் வலது கால் கட்டை விரலில் சிறிய Band-aid அளவிலான pulse-oximeter probe-பை6 பொருத்திக்கொண்டே படபடவென பேச ஆரம்பித்தாள் நர்ஸ் செல்வி, “டாக்டர், பத்து நிமிஷத்துக்கு முன் Casualty-யிலிருந்து7 கால். Emergency Deliver, வந்து baby-யை receive பண்ணுங்கன்னு. நான் free-யா இருந்ததால கீழே ஒடினேன். நான் அங்கே போனப்பவே தலை வெளியே வந்திருச்சு. ரெண்டு நிமிஷத்துல full delivery ஆயிருச்சு. Baby மூச்சு விடலை, அழுகலை. Activity ஒன்னும் இல்லை.  Full delivery ஆனதுக்கப்புறம் கையில மல்லாக்க புடிச்சு முதுகுல தட்டினேன். Breathing and cry ஆரம்பிச்சுருச்சு. மூக்கிலும், வாயிலும் suction8 போட்டேன். Placenta9 வெளியே வந்ததும், cord10 cut பண்ணி, clamp பண்ணிட்டு, குழந்தையை தூக்கிட்டி NICU-க்கு ஒடி வந்துட்டேன்.” இன்னும் மூச்சு இரைத்துக் கொண்டிருந்தது அவளுக்கு.

ட்ரிப்ஸ் போடுவதற்கு ஏதுவாக ஏதாவது ரத்த நாளம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார் ரமேஷ்.

தொடரும்…

தொடர்ச்சி: உலக நாயகன் – 2

அடிக்குறிப்புகள்:

இந்தக் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மருத்துவத்துறையில் நான் பார்த்த நிகழ்வுகளையும், சந்தித்த நபர்களையும் ஒட்டி நான் கற்பனை செய்தவை. உன்மையான நபர்களையோ சம்பவங்களையோ குறிப்பவை அல்ல.

கதைதான் என்றாலும், நான் உபயோகித்திருக்கும் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட சொற்களை இந்த குறிப்புகளில் விவரிக்கிறேன்.

 1. பச்சிளம்குழந்தைகள் நிபுணர் – Neonatologist – பிறப்பில் இருந்து ஒரு மாதத்திற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கான மருத்துவத் துறை நிபுணர். பெரும்பாலும் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் (NICU – Neonatal Intensive Care Unit – பச்சிளம் குழந்தைகள் காப்பகம்) வைத்துப் பார்த்துகொள்பவர்.
 2. வார்மர் (warmer) – முன்னெ இன்க்யுபெடர் (incubator) என்று அழைக்கபட்ட பச்சிளம்குழந்தைகளை பராமரிக்க உபயோகபடுத்தப்படும் கண்காணிப்புக் கருவிகள் (monitor) மற்றும் சூடாக வைத்துக்கொள்ள விளக்குகள் பொருத்தப்பட்ட சிறு படுக்கை.
 3. ஆக்சிஜன் (பிரானவாயு) அளிக்கும் கண்ணாடிப் பெட்டி – ஆக்சிஜன் ஹுட் (Oxygen hood).
 4. Vernix – முழுப் பெயர் வெர்னிக்ஸ் கெஸியோஸா (vernix caseosa) கருவில் குழந்தையின் சருமத்தில் ஒட்டியிருக்கும் வெள்ளையான தயிர் போன்ற திரவம்.
 5. History – மருத்துவத்தில், இதுவரை நடந்தது என்ன என்பதற்கு உபயோகபடுத்தப்படும் வார்த்தை.
 6. பல்ஸ்-ஆக்ஸிமீட்டர் ப்ரோப் – (pulse-oximeter probe) – குழந்தையின் இருதய துடிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை கண்காணிக்கும் கருவி. பெரும்பாலும் கால் கட்டை விரலின் மேல் மடக்கிப் பொருத்தி ப்ளாஸ்த்திரி சுத்திக் கட்டிவிடுவார்கள்.
 7. Casualty – அவசர சிகிச்சைப் பிரிவு. அமெரிக்காவில் எமெர்ஜன்சி ரூம் / டிபார்ட்மெண்ட் (ER / ED)
 8. Vacuum suction – குழந்தையின் முக்கிலும் வாயிலும் விட்டு உறிஞ்சி சுத்தப்படுத்த உபயோகிக்கப்படும்.
 9. Placentaநஞ்சு
 10. Umbilical cord – நஞ்சுக்கொடி அல்லது தொப்புள் கொடி.
Advertisements

10 பின்னூட்டங்கள் »

 1. நல்ல முயற்சி..இன்னும் கொஞ்சம் நீளமா எழுதலாம் 🙂

  பின்னூட்டம் by டிபிசிடி — ஜூன் 16, 2010 @ 10:33 முப | மறுமொழி

  • என் குருநாதர் பேயோன் எழுதும் தொடர்கதையில் நீங்கள் இப்படி பின்னூட்டமிட்ட மாதிரி தெரியலையே ?! 😀

   பின்னூட்டம் by விஜய் — ஜூன் 16, 2010 @ 10:58 முப | மறுமொழி

 2. சூப்பர்! இப்படித் தீவிர தொழில்நுட்ப வாசனையோடு, அடிக்குறிப்புகளெல்லாம் தந்து எழுதுவது புதிதாக, சுவையாக இருக்கிறது. மெயின்டெயின் செய்யவும். 🙂

  பின்னூட்டம் by சாத்தான் — ஜூன் 16, 2010 @ 10:34 முப | மறுமொழி

 3. […] This post was mentioned on Twitter by Vijay and சாத்தான், THENNARASU. THENNARASU said: RT @scanman: தமிழில் கதை எழுதும் முயற்சி. உலக நாயகன் – 1: http://wp.me/pHloO-p […]

  Pingback by Tweets that mention உலக நாயகன் – 1 « …நிழல்கள்… -- Topsy.com — ஜூன் 16, 2010 @ 10:45 முப | மறுமொழி

 4. சுஜாதாவிற்கு பின் ஒரு மருத்துவ மனையின் உள் நிகழ்வுகளை வெறும் செய்தியாக / கதைத்தளமாக மட்டும் காட்டாமல்,ஆகிருக்கும் சூழ்நிலைகளை ஒரு பேராசிரியர் போல வாசகனுக்கு அறிமுகம் செய்து விளக்கமும் தருவது நீங்கள்தான். சுஜாதாவின் விவரிப்பில் சற்று “நக்கல்” இருக்கும் படிபவர்களை கவர. ஆனால் நீங்கள் விவரிக்கும் விஷயங்கள் புதுமையாகவும், வாசகர்கள் இன்னமும் துறை பற்றி தெரிந்துகொள்ள விழையும் ஆர்வத்தை தூண்டுகிறது.

  எத்தனை பேருக்கு இந்த மனம் இருந்துவிடும்? தனக்கு தெரிந்தவற்றை பிறரிடம் பகிர்ந்து கொள்ள?!
  தொடர்ந்து எழுதுங்கள். உங்களுகென்று ஒரு வாசகர் கூட்டம் உள்ளதை மறவாதீர்கள். பாராட்டுக்கள்.

  பின்னூட்டம் by kakkoo-Manickam — ஜூன் 16, 2010 @ 12:39 பிப | மறுமொழி

  • ஊக்கப் படுத்தும் நல்ல வார்த்தைகளுக்கும், உங்கள் பதிவில் என் பதிவிற்கு சுட்டி கொடுத்ததற்க்கும் மிக்க நன்றி ஐயா.

   பின்னூட்டம் by விஜய் — ஜூன் 16, 2010 @ 12:58 பிப | மறுமொழி

 5. தொடர்ந்து படிக்க ஆர்வமா காத்துகிட்டிருக்கோம்.. ராபின் குக் படிப்பது மாதிரி ஒரு ஃபீல்.

  பின்னூட்டம் by drongo — ஜூன் 16, 2010 @ 2:45 பிப | மறுமொழி

 6. அறிவியல் கட்டுரைகள் தொடர்ந்து கதைகளா. தொடருங்கள் Dr 🙂

  தமிழில் கதை/கட்டுரை படிக்கும்போது ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலமாக இருப்பது எளிதா இல்லை தங்கிலீசில் இருப்பது எளிதா ? மொழி பெயர்க்காவிடில் ஆங்கிலத்திலேயே இருப்பதே எனக்கு எளிதாகப்படுகிறது 🙂

  பின்னூட்டம் by யாத்ரீகன் — ஜூன் 17, 2010 @ 9:30 முப | மறுமொழி

  • நன்றி யாத்ரீகன். மருத்துவமனையில் வேலை நேரத்தில் எப்படிப் பேசிக்கொள்வார்களோ அதை அப்படியே எழுத முயற்ச்சித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் அல்லது தங்கிலீசில், எந்த விதத்தில் எழுதினாலும் பல சமயம் என்ன பேசுகிறார்கள் என்பதே புரியாமல் இருக்கும். அதனால்தான் விரிவான விளக்கவுறையும் எழுதுகிறேன்.

   பின்னூட்டம் by விஜய் — ஜூன் 17, 2010 @ 9:46 முப | மறுமொழி

 7. அட!! இப்பத்தான் கவனிச்சேன்..நல்ல முயற்சி..தொடருங்கள் 🙂

  பை தி வே, உன்மையான >> உண்மையான 😉

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  பின்னூட்டம் by சுவாசிகா — ஜூன் 26, 2010 @ 10:40 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: