…நிழல்கள்…

ஜூன் 2, 2010

எம்.ஆர்.ஐ ஸ்கான் – பாகம் 1

ட்விட்டரில் நண்பர் அலெக்ஸ் பாண்டியன் எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கான் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலை பதிவாக எழுதுகிறேன் என்று சொன்னேன்.

நண்பர் அலெக்ஸ் கேட்ட கேள்விகள்:

 1. எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுக்கும் கருவியின் விலை என்னவாக இருக்கும். எத்தனை க’ஷ்’டமர்கள் MRI எடுத்த பிறகு break-even ஆகும்.
 2. இப்பொழுதெல்லாம் பல மருத்துவர்கள் எக்ஸ்-ரே (X-ray) படம் எடுத்துப் பார்பதற்கு முன்னையே எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுத்து வரச் சொல்கிறார்களே.
 3. அதிகமாக உள்ள எம்.ஆர்.ஐ ஸ்கான் விலை குறைய வாய்ப்புள்ளதா.

ட்விட்டர் மக்களிடம் உங்களுக்கு எம்.ஆர்.ஐ பற்றி கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் சொல்லுங்கள், அதற்கும் விடை அளிக்க முயற்சிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். பல நல்ல கேள்விகளை கேட்டார்கள்.

எம்.ஆர்.ஐ ஸ்கானை பற்றி பரவலாக மக்கள் மத்தியில் இருக்கும் சில சந்தேகங்களையும் கேள்வி பதில் வடிவத்தில் எழுத முயற்சிக்கிறேன்.

எம்.ஆர்.ஐ ஸ்கான் என்றால் என்ன?

[விளக்கத்தில் அறிவியல், குறிப்பாக பௌதீகச் சொற்கள் அதிகமாக உள்ளதைப் பார்த்து பயந்து விடாதீர்கள். எனக்கும் இவை பற்றி அதிகம் தெரியாது. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கு புரியும்படியாகத்தான் எழுதியிருக்கிறேன்]

எம்.ஆர்.ஐ (MRI) என்பது மாக்னேடிக் ரெசனன்ஸ் இமேஜிங் (Magnetic Resonance Imaging) என்கிற சொற்றொடரின் சுருக்கம்.

“எம்.ஆர்.ஐ ஸ்கான்” தமிழாக்கம் என்ன என்று ட்விட்டரில் கேட்டதற்கு நண்பர்கள் மருத்துவர் புருனோ, வானம்பாடி, TBCD ஆகியோர் கொடுத்த பதில்கள்: காந்த மீளதிர்வு படம் / படமாக்கல்; காந்த அதிர்வு சோதனை/பரிசோதனை.

எம்.ஆர்.ஐ ஸ்கான் என்பது எக்ஸ்-ரே (X-ray), சி.டி. ஸ்கான் (CT scan), அல்ட்ராசவுண்ட் ஸ்கான் (Ultrasound scan), நியூக்ளியர் ஸ்கான் (Nuclear scan) போன்ற மற்ற உடல் அங்கங்களை படம் பிடித்துக்காட்டும் ஸ்கான் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

எம்.ஆர்.ஐ ஸ்கானின் முக்கிய அங்கம் ஒரு பெரிய காந்தம் (magnet) ஆகும். இது நம் குழந்தைகள் விளையாடும் நிரந்தர காந்தத்தன்மை வாய்ந்த உலோக காந்தமாகவும் (permanent magnet) இருக்கலாம், அல்லது மின்சக்தியினால் செயற்கையாக காந்தத்தன்மை பெரும் உலோகத்தால் ஆன அல்லது உலோகக்கலவையிலான (alloy) காந்தமாகவும் இருக்கலாம் (superconducting magnet, இதற்கு தூய தமிழ் பெயர் மீ கடத்திக்காந்தம்). இந்த காந்தத்திற்கு நம் விளையாட்டுக்கு உபயோகிக்கும் காந்தத்தைவிடவும், பூமியில் இயற்கையாக உள்ள காந்தப்புலனைவிட (Earth’s natural magnetic field) பல ஆயிரம் மடங்கு சக்தி அதிகம். காந்தப்புலனின் சக்தி / அளவு டெஸ்லா (Tesla = T) கணக்கில் குறிக்கப்படும். பூமியில் இயற்கையாக உள்ள கந்தப்புலனின் அளவு 0.00003 டெஸ்லா. மருத்துவத்தில் பயன்படும் மிகச்சிறிய எம்.ஆர்.ஐ ஸ்கான் இயந்திரங்களின் காந்தப்புலன் அளவு 0.2 மற்றும் 0.3 Tesla, அதிகபடியான அளவு 3 Tesla. அதாவது இயற்கை காந்தப்புலனைவிட சுமார் பத்தாயிரம் மடங்கிலிருந்து ஒரு லட்சம் மடங்கு அதிகம் சக்திவாய்ந்த காந்தங்களை உபயோகிக்கிறோம்.

இந்த பெரிய காந்தம் ஒரு உளுந்துவடை போன்று நடுவில் ஓட்டை உள்ள உருவம் கொண்ட வட்டமான இயந்திரத்தினுள் பொருந்தியிருக்கும் (அதன் பெயர் gantry). இந்த வட்ட இயந்திரத்தினுள் ஒருவரை படுக்க வைத்து இயந்திரத்தை இயக்கினால், அவருடைய உடல் அந்த இயந்திரத்திலிருக்கும் பெரிய காந்தத்தின் காந்தபுலணிற்கு (magnetic field) உட்படும். அப்படி சக்திவாய்ந்த காந்தபுலணிற்கு உட்பட்டிருக்கும் உடலுக்கு வெளியில் இருந்து வானொலி அதிர்வெண்கள் (radio frequency waves / RF waves) மூலம் அதிர்வு ஏற்படுத்தப்படும் (excitation). இந்த அதிர்விலிருந்து மெதுவாக உடல் மறுபடியும் தளர்ந்து இயந்திரத்தின் காந்தத்தன்மையை அடையும் (relaxation to original magnetic field). அதிர்வினால் ஏற்பட்ட கூடுதல் சக்தி (energy) இந்தத் தளர்ச்சி ஏற்படும் பொழுது உடலிலிருந்து வானொலி அதிர்வெண்கள் மூலம் வெளிபடும். வெளிபடும் வானொலி அதிர்வேன்களை (emitted RF waves) வைத்து உடலை படம் பிடிப்பதுதான் எம்.ஆர்.ஐயின் ரகசியம். [அடுத்து வருவது  நண்பர் கொத்தனார் பின்னூட்டத்தில் கேள்வியாகக் கேட்டதிலிருந்து சேர்த்துக்கொண்டேன்] பலவித அடர்த்திகளில் இருக்கும் பாகங்களில் இருந்து வெளிவரும் வானொலி அதிர்வலைகள் வித்தியாசமாக இருப்பதை வைத்து இந்தப் படங்கள் கிடைக்கின்றன.

எம்.ஆர்.ஐ ஸ்கான் முறையில் எக்ஸ்-ரே (X-ray), சி.டி. ஸ்கான் (CT scan) போன்ற ஸ்கான் முறைகளில் உபயோகப்படுத்தப்படும் உடலுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய ஊடுகதிர்கள் (ionizing radiation, ie, X-rays) கிடையாது. எம்.ஆர்.ஐ. ஸ்கானில் இருக்கும் காந்தத்தன்மையால் நம் உடலுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது. காந்தத்திலிருந்து வெளியே எடுத்ததும், ஸ்கான் செய்யப்பட்டவரின் உடல் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

மருத்துவத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கான் எப்படி உபயோகிக்கப்படுகிறது?

இன்றைய நிலையில், எம்.ஆர்.ஐ ஸ்கான் உச்சி முதல் பாதம் வரை எல்லா மனித உறுப்புகளையும் துல்லியமாகப் படம் பிடிக்கும் வல்லமையுடன் இருக்கிறது. பல மருத்துவத்துறை நிபுணர்களால் எம்.ஆர்.ஐ ஸ்கான் இல்லாமல் சரியான சிகிச்சை கொடுக்கவே முடியாது என்கிற நிலைதான் உள்ளது.

ஆங்கிலத்தில் soft tissues என்று சொல்லப்படும் உடலின் மென் உறுப்புகளையும் (உதாரணமாக மூளை, முதுகுத்தண்டு, கண்கள், இருதயம், ஈரல், கணையம்) மற்றும் மூட்டுகளையும் (joints),  தசைகளையும் (muscles) துல்லியமாகப் படம் பிடிக்க எம்.ஆர்.ஐ. தான் சிறந்த ஸ்கான் முறை.

கர்பிணிப் பெண்களுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கான் (Ultrasound scan) செய்து குழந்தையின் வளர்ச்சியையும் உறுப்புக்களையும் படம் பிடிப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கருவிலிருக்கும் குழந்தைக்கு உறுப்புகளில் கோளாறு இருப்பின் அதை அல்ட்ராசவுண்ட் ஸ்கானைவிடத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்ட எம்.ஆர்.ஐ ஸ்கான் உதவும்.

அண்மையில் சில வருடங்களாகப் பிரபலமாயிருப்பது மூளையின் செயல்பாட்டை ஸ்கான் செய்யக் கூடிய ஃபன்க்ஷனல் எம்.ஆர்.ஐ ஸ்கான் (functional MRI, also known as fMRI).

எம்.ஆர்.ஐ. ஸ்கான் பெரியதா / நல்லதா அல்லது சி.டி. ஸ்கான் (CT scan) பெரியதா / நல்லதா?

இது சாதாரண மக்களுக்கு மட்டுமில்லை, மருத்துவத்துறையிலே உள்ள பலருக்கும் உள்ள சந்தேகம். பரவலாக சி.டி. ஸ்காணைவிட எம்.ஆர்.ஐ ஸ்கானுக்கு விலை அதிகம், அதானாலையே இந்தக் கேள்வி மக்களின் மத்தியில் பரவி விட்டதோ என்று எனக்கொரு சந்தேகம்.

முதல் கேள்விக்கான பதிலில் நான் குறிப்பிட்டிருந்தேன், இவ்விரண்டு ஸ்கான்களும் வெவ்வேறு முறைகளை உபயோகித்து உடலைப் படம் பிடிக்கின்றன என்று.

ஒவ்வொரு ஸ்கான் முறைக்கும் சில பிரத்தியேகமான உபயோகங்கள் உள்ளன. உதாரணமாக நுரையீரலை படம் பிடிக்க சி.டி.ஸ்கான் தான் உசிதம், மூட்டுகளினுள்ளே உள்ள மென் தசைகளை (ligaments, tendons) படம் பிடிக்க எம்.ஆர்.ஐ தான் உசிதம். சில/பல இடங்களில் இரண்டில் எதை உபயோகித்தாலும் தப்பில்லை (உதாரணம்: மூளை). பல நேரங்களில் எந்த ஸ்கான் முறையை உபயோகிக்கலாம் என்பதை அந்த மருத்துவமனையிலோ அந்த ஊரிலோ எது வசதியாக உள்ளது என்பதைப் பொறுத்தே மருத்துவர்கள் முடிவு செய்கிறார்கள்.

பதிவின் நீளம் அதிகம் ஆகிவிட்டது. இதை முதல் பாகமாக இட்டுவிட்டு மீதியை நாளை எழுதுகிறேன். தமிழில் எழுதிப் பழக்கமில்லாததால் இதில் எழுத்து, இலக்கணப் பிழைகள் அதிகம் இருக்கும். மிகவும் மோசமாக உள்ளவைகளைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன். மேலும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். விடை அளிக்க முயலுகிறேன்.
பாகம் 2 இங்கே உள்ளது.
Advertisements

19 பின்னூட்டங்கள் »

 1. //இப்பொழுதெல்லாம் பல மருத்துவர்கள் எக்ஸ்-ரே (X-ray) படம் எடுத்துப் பார்பதற்கு முன்னையே எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுத்து வரச் சொல்கிறார்களே.//

  இது புகார் மாதிரில்ல இருக்கு. கேள்வியா வகைபடுத்திகிட்டீங்களா?

  நல்லா எழுதிருக்கீங்க. தமிழில் கலைசொற்களை தேடியெடுத்து பயன்படுத்திருக்கீங்க. Scan என்றால் ‘படம்’? அப்ப உங்கள் ட்விட்டர் பிடியை (அதாங்க Handle) ‘படமான்’ என்று வைத்துக் கொள்வீர்களா?

  வாழ்த்துகள். தொடர்ந்து எழுதி எம்மை இன்புறுத்துவீர்களாக.

  பின்னூட்டம் by ஸ்ரீதர் நாராயணன் — ஜூன் 2, 2010 @ 2:15 முப | மறுமொழி

  • சூடான கமெண்டுக்கு நன்றி வரிக்ஸ்.

   அது புகார் தான். அடுத்த பகுதியில் பார்ப்போம்.
   கலைசொற்களை தேட நான் ரொம்ப கஷ்டப்படவில்லை. ட்விட்டரில் கேட்டேன். ஆசான் பெனாத்தல் சுரேஷ் சொல்லிக் கொடுத்தார்.

   பி.கு. ட்விட்டர் பெயரை போடாமல் உண்மை பெயரை போட்டாலும், நீர் எனக்கு வரிக்குரிதை தான்.

   பின்னூட்டம் by விஜய் — ஜூன் 2, 2010 @ 7:48 முப | மறுமொழி

 2. அடுத்த பகுதிக்காக ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றேன் 🙂

  பின்னூட்டம் by யாத்ரீகன் — ஜூன் 2, 2010 @ 3:58 முப | மறுமொழி

 3. எளிமையாவே இருக்கு சார் ஆரம்பம். ப்ளீஸ் கண்டின்யூ 🙂

  பின்னூட்டம் by பினாத்தல் சுரேஷ் — ஜூன் 2, 2010 @ 7:50 முப | மறுமொழி

 4. தகவல்கள் எக்கச்சக்கமாக இருந்தாலும் படிக்க சுவையாக இருக்கிறது. சென்ற தொடர் போல விட்டுவிடாமல் தொடர்ந்து எழுதுங்கள். 🙂

  பின்னூட்டம் by சாத்தான் — ஜூன் 2, 2010 @ 7:59 முப | மறுமொழி

  • நன்றி ஐயா. இது எம்.ஆர்.ஐ பற்றி வலையில் தேடுபவர்களுக்கு உதவும் என்பதால் தொடர்ந்து எழுதிவிடுவேன்.

   பின்னூட்டம் by விஜய் — ஜூன் 2, 2010 @ 8:16 முப | மறுமொழி

 5. வழக்கம் போல குற்றச்சாட்டை முதலில் படித்துவிடுகிறேன். ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள். எழுதிய பின் யாரிடமாவது காண்பித்து குறைத்துக் கொண்டால் நான் குரைக்காமலிருப்பேன். அதே மாதிரி கொஞ்சம் படம் வரைந்து பாகம் குறித்தால் இன்னும் தெளிவு கிடைக்கும்.

  நீங்க ட்விட்டரில் கேட்ட உடன் பதில் சொன்னது பெனாத்தலும் மானஸ்தனும். பெனாத்தலாவது கருணை அடிப்படையில் பின்னூட்டத்தில் வந்துட்டாரு. ஆனா பாவம் மானஸ்தன்! 🙂

  காந்தப் புலனில் இருக்கும் உடலின் மீது வானொலி அதிர்வலைகள் செலுத்தப்படுகிறது. அந்த அதிர்விலிருந்து மீளும் உடல் மீண்டும் அந்த வானொலி அதிர்வலைகளை வெளியிடுகிறது. அதனைப் படம் பிடிக்கும் பொழுது உடலின் உட்புறத்தில் இருக்கும் பாகங்களின் படம் கிடைக்கிறது. – இது கொஞ்சம் சரியாப் புரியலை. அதாவது பலவித அடர்த்திகளில் இருக்கும் பாகங்களில் இருந்து வெளிவரும் வானொலி அதிர்வலைகள் வித்தியாசமாக இருப்பதை வைத்து இந்தப் படங்கள் கிடைக்கின்றனவா?

  மத்தபடி புரியற மாதிரி எழுதறீங்க. உங்க டாக்டர் நண்பர்கள் கோபப்படப் போறாங்க பார்த்து.

  பின்னூட்டம் by இலவசக்கொத்தனார் — ஜூன் 2, 2010 @ 9:46 முப | மறுமொழி

  • நன்றி கொத்தனார் அய்யா. எழுதுவதை படிக்க ஆள் இல்லை என்பதால் ட்விட்டரில் போஸ்டர் ஓட்டும் நிலைமை உள்ள இந்தக்காலத்துல எழுதியதைத்திருத்திக்கொடுக்க யாரைக் கேட்பது.

   நிறைய பேர் தமிழாக்கத்திற்கு உதவினார்கள். பெனாத்தல் முதல் என்பதால் அவர் பெயரை மட்டும் போட்டேன்.

   பலவித அடர்த்திகளில் இருக்கும் பாகங்களில் இருந்து வெளிவரும் வானொலி அதிர்வலைகள் வித்தியாசமாக இருப்பதை வைத்து இந்தப் படங்கள் கிடைக்கின்றனவா

   அதே! அதே! கரீக்டா பாயிண்டைப் புடிச்சுட்டீங்க.

   பின்னூட்டம் by விஜய் — ஜூன் 2, 2010 @ 9:58 முப | மறுமொழி

 6. உபயோகமான தகவல்கள்!! கண்டிப்பா தொடருங்கள்..

  பின்னூட்டம் by செந்தில் நாதன் — ஜூன் 2, 2010 @ 10:24 முப | மறுமொழி

 7. //கொஞ்சம் படம் வரைந்து பாகம் குறித்தால் இன்னும் தெளிவு கிடைக்கும். //

  அதே!

  பின்னூட்டம் by ஆயில்யன் — ஜூன் 2, 2010 @ 10:30 முப | மறுமொழி

 8. எளிய தமிழில் அழகாக விளக்கம்.
  பகிர்வுக்கு நன்றி
  தொடர்ந்து இதுபோல எழுதுங்கள்.

  பின்னூட்டம் by manickam — ஜூன் 2, 2010 @ 11:26 முப | மறுமொழி

 9. இப்போதைக்கு ஒரு ச‌ந்தேக‌மும் வ‌ர‌வில்லை,வ‌ந்தால் கேட்கிறேன்.

  பின்னூட்டம் by vaduvurkumar — ஜூன் 2, 2010 @ 1:52 பிப | மறுமொழி

 10. arumaiyana pathivu iththanai visayangal MRI scanil irrukkiratha enpathai padikkum pozuthu viyapputhan pongal. ennudaiya parattukkalai therivithukkolkiren. thamilil marumozi eluththath theriyavillai. Poruththarulka

  அருமையான பதிவு இத்தனை விஷயங்கள் MRI ஸ்கேனில் இருக்கிறதா என்பதை படிக்கும் பொழுது வியப்புதான் போங்கள். என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  பின்னூட்டம் by Guru.Radhakrishnan — ஜூன் 2, 2010 @ 9:24 பிப | மறுமொழி

 11. மிகவும் பிரையோஜனமஹா இருந்தது உங்கள் பணி இன்னுன் சிறக்க வாழ்த்துக்கள்

  பின்னூட்டம் by niyas — ஜூன் 3, 2010 @ 12:26 பிப | மறுமொழி

 12. […] எம்.ஆர்.ஐ ஸ்கான் – பாகம் 2 கோப்பு வகை: மருத்துவம்,ரேடியாலஜி — விஜய் @ 5:13 பிற்பகல் பாகம் 1 இங்கே உள்ளது. […]

  Pingback by எம்.ஆர்.ஐ ஸ்கான் – பாகம் 2 « …நிழல்கள்… — ஜூன் 3, 2010 @ 5:42 பிப | மறுமொழி

 13. நன்றி. டாக்டர். அருமையான தகவல்கள். தொடராக எழுதவும். இன்னும் சில கேள்விகள் உண்டு

  – MRI எடுக்கும்போது எல்லா நகைகள், ஹேர்க்ளிப்புகள் போன்ற உலோகசமாச்சாரங்களை கழட்ட சொல்கிறார்கள் (தாலி உட்பட)- ஏன், என்ன ஆகும் காந்த அலை புலத்தில்? தவறான ரிப்போர்ட் வருமா இல்லை இந்த உலோகங்களுக்கோ, நோயாளிக்கோ பாதிப்பு ஏற்படுமா?

  – உடலின் உள்ளே Pacemaker,Stent போன்றவை இருப்பவர்களுக்கு என்ன பாதிப்பு வரும்?

  பின்னூட்டம் by Alex Pandian — ஜூன் 8, 2010 @ 7:28 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: