…நிழல்கள்…

நவம்பர் 18, 2009

ஞாபகம் வருதே – 1

தம்பி அருண் ட்விட்டரில் இன்னொரு நண்பரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது நான் மூக்கை நுழைக்க, அருண் என்னை கேட்ட கேள்வி, “காலேஜ்ல இருக்கும்போது படம் பார்க்காம வேற எப்போ சார் பார்க்கறது??”

நியாயமான கேள்வி. நம்ம ரைட்டர் பேயோன் பாஷையில் rhetorical கேள்வி. அதாவது அதற்க்கு பதில் தேவையில்லை. Or any answer is superfluous.

அருணுடைய ட்வீட்டைப் படித்ததும் மனதில் பழைய கல்லூரி நாட்களின் ஞாபகம் flashback ஆக ஓடியது.

கோவையில் மருத்துவக் கல்லூரியில் நான் படித்த சமயம் எங்கள் வகுப்பில் அதிகம் இருந்தது சேரநாட்டு மங்கையரே. அதில் சில பேர் எனக்கு நல்ல நண்பிகள். கடைசி ஆண்டு படிக்கும்பொழுதும் ஹவுஸ் சர்ஜனாக இருந்த ஆண்டும் என்னிடம் கார் இருந்தது. அதே போல் இன்னும் இரண்டு நண்பர்களிடமும் கார் இருந்தது. ஊரில் நல்ல சினிமா, அதாவது நண்பிகள் விரும்பிப் பார்க்கும் ஆங்கிலம் அல்லது ஹிந்தி படம், ஏதாவது போட்டுவிட்டால் எங்கள் மூவருக்கும் கொண்டாட்டம்தான். சினிமா பார்க்க நண்பிகளைக் கூட்டிப் போவது எங்கள் வேலை.

சும்மா பொண்ணுக கூப்பிட்டா நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு வாலை ஆட்டியபடி போய் விழுந்து விழுந்து செய்வோம் என்றும் நினைத்துவிடாதீர்கள். நாங்க எங்க நண்பிகளை சினிமாவுக்கு கூட்டிக்கிட்டு போற பாணியே தனி.

ஊரில் நல்ல படம் ஓடுதுன்னு தெரிஞ்சா அந்த நாள் காலையே நண்பிகள் உஷாராக ப்ளான் போட ஆரம்பித்து விடுவார்கள். எங்கள் (அதாவது கார் வைத்திருக்கும்) மூவரில் யாரவது ஒருவரிடம் சொல்லி இத்தனை டிக்கெட் மாலைக் காட்ச்சிக்கு எடுத்துவிடு என்று முதலில் காசு கொடுத்துவிடுவார்கள். ஓட்டுனராக போகும் எங்களுக்கு இலவச டிக்கெட் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. எத்தனை பேர் போகிறோம் என்பதைப் பொறுத்து வண்டி வசதி ஏற்பாடு செய்து விட வேண்டும். அடுத்து, எங்கள் வகுப்பில் சக மாணவி + இந்த மாதிரி சினிமா trip-இல் கண்டிப்பாக பங்கெடுத்துக்கொள்ளும் கல்லூரி முதல்வரின் மகள் மூலமாக அவர் தந்தையிடம் இரவு மகளிர் ஹாஸ்டலுக்கு கதவடைக்கும் நேரத்திற்குப் பின் வருவதற்கு ஒரு பர்மிசன் கடுதாசி வாங்கிவிடுவார்கள் (இந்த மகளிர் விடுதி கதவடைப்பு சமாச்சாரம் கோவை மாவட்டத்தில் கல்லூரி படிப்பு படித்த அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்).

மாலை கல்லூரி முடிந்தவுடன் நண்பிகள் சிலர் பக்கத்தில் இருக்கும் பேக்கரிக்கு சென்று படம் பார்க்கும் பொழுது கொறிக்க பல விதமான ஸ்நாக்ஸ் வாங்கி வந்து எங்களிடம் பத்திரமாக காரில் வைக்கச் சொல்லி கொடுத்துவிடுவார்கள். அதற்குப் பின் அவர்களெல்லோரும் நல்ல உடை மாட்டி சிங்காரித்து வரும் வரை எங்களுக்கு வேலை இல்லை. பெண்கள் சிங்காரித்து என்று நேரத்திற்கு வந்திருக்கிறார்கள்? அங்கும் அப்படிப்பட்ட அதிசயமெல்லாம் நடக்கவில்லை. நாங்கள் சென்ற எந்த ஒரு சினிமாவாக்கும் படம் ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன் அரங்கிற்குள் சென்றதில்லை. அவசரமாகக் கிளம்பி அதிவேகமாக கார்களை ஓட்டிச் சென்று ஒரு வழியாக அரங்கிற்கு அழைத்து செல்வோம். காரில் இளம் பெண்களை,  அதுவும் மருத்துவக் கல்லூரி மாணவிகளை வைத்துக்கொண்டு வேகமாக ஓட்டுவது ஒரு இனிய சுகம். பெரும்பாலான நேரம் நாம் ஓட்டும் வேகத்தையும் ஓட்டும் விதத்தையும் விமர்சிப்பதும், வீரிட்டுக் கத்துவதுமாக அமளியாக இருக்கும். காரில் டேப் ரிக்கார்டர் (அந்தக் காலத்தில் CD ப்ளேயரெல்லாம் எங்கள் கார்களில் இல்லை) இருந்தாலும் அதில் பாட்டுப் போட வேண்டியதில்லை. கண்டிப்பாக யார் காதிலும் அந்த பாட்டுச் சத்தம் கேட்காது.

அரங்கினுள் சென்று சீட்டில் அமர்ந்து பெருமூச்சுவிட்டு சுத்தியும் முத்தியும் பார்த்தா ஒரே பெருமையா இருக்கும் எங்களுக்கு. அப்பவெல்லாம் ஒரு புள்ளைய தள்ளிக்கிட்டு சினிமாவுக்கு வர்றதே பெரிசு. அக்கம்பக்கம் உக்கார்ந்திருக்கிற ஆண்கள் எல்லாம் எங்களை வயிற்றெரிச்சலுடன் பார்ப்பது போல் இருக்கும். மானசீகமாக காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு நாங்களும் பீட்டர் விடுவோம் (அந்த வார்த்தை பிறகு பழகியது. அப்போது அதற்க்கு வெறும் படம் போடுவது என்றே விஷயம் அறிந்த அறிஞர்கள் சொல்லுவார்கள்).

படம் எப்பேர்ப்பட்டதாக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. கண்டிப்பாக பத்து நிமிடத்திற்கு ஒரு முறையாவது கேக், பப்ஸ், பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ், கூடவே பேப்பர் கப்பில் தம்ஸ்-அப், லிம்கா போன்று ஏதாவது எங்களுக்கு வந்துகொண்டே இருக்கும்.

படம் முடிந்ததும் ஏதாவது நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வோம். மூக்கு முட்ட நாங்கள் தின்று முடித்த பிறகு எங்கள் பக்கம் நண்பிகளால் சாப்பிட்டு முடிக்க முடியாமல் போனவை எல்லாம் வரும். விடுவோமா. Background-இல், “How can they eat this much yaa!?” போன்ற வசனங்கள் ஒலிக்க அதையும் சாப்பிடுவோம். (சாப்பாடும் நண்பிகள் செலவுதான்.)

சாப்பிட்டு முடித்து வண்டியை கிளப்பியவுடன் அடுத்த டென்ஷன் ஆரம்பித்துவிடும். விடுதி வார்டன் உள்ளே விடுவார்களா என்று. நம்ம நண்பிகளுக்கும் அந்த வார்டன் அம்மையாருக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகாது. எதோ ஸ்கூல் டீச்சர் போல் இவர்களை ஒடுக்கி வைக்க அவிங்க முயற்சி பண்ண, நாங்கெல்லாம் வருங்கால டாக்டர்களாக்கும் என்கிற திமிரோடு நண்பிகள் எதிர்த்து நிற்பதும் எப்பொழுதுமே நடப்பதுதான்.

விடுதி வாயிலில் நண்பிகளை இறக்கி விட்டு நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டியததுதான். ஓரிரு நிமிட பேச்சுவார்த்தைக்குப் பின் முதல்வரிடமிருந்து வாங்கி வந்த கடித்தத்தைப் பெற்றுக் கொண்டு உள்ளே விட்டுவிடுவார் வார்டன் அம்மையார். வேலிக்கு வெளியே இருந்தே கோரஸாக “குட் நைட்” சொல்லிவிட்டு ஒரு நல்ல காரியத்தை செய்த திருப்தியுடன் நாங்கள் வெளியே தங்கியிருந்த வீடுகளுக்கு திரும்புவோம்.

Advertisements

21 பின்னூட்டங்கள் »

 1. //சும்மா பொண்ணுக கூப்பிட்டா நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு வாலை ஆட்டியபடி பொய் விழுந்து விழுந்து செய்வோம் என்றும் நினைத்துவிடாதீர்கள்//

  ச்சே! ச்சே! அப்பிடியெல்லாம் நினைக்கமாட்டோம்! :)))

  பின்னூட்டம் by ஆயில்யன் — நவம்பர் 18, 2009 @ 12:53 முப | மறுமொழி

 2. ம்ம் பதிவு படிச்சதுல பொதுவா ஒரு விசயம் புரியுது தெரியுது! டாக்டர் பல வித பிரஷர்களுக்கிடையில காலேஜ் அனுபவங்களை சொல்லவந்திருக்கீங்கன்னு :))))))) [ஸோ காலேஜ் கதையெல்லாம் பிரம்மசர்யத்திலயே ப்ளாக்ல சொல்லிமுடிச்சுடுங்கப்பா!)

  பின்னூட்டம் by ஆயில்யன் — நவம்பர் 18, 2009 @ 12:56 முப | மறுமொழி

  • //காலேஜ் கதையெல்லாம் பிரம்மசர்யத்திலயே ப்ளாக்ல சொல்லிமுடிச்சுடுங்கப்பா//
   உங்களுக்கு பொண்ணு கொடுக்க போறவர் கண்ணில் பாடதபடி இருந்தால் சரி 🙂

   பின்னூட்டம் by விஜய் — நவம்பர் 18, 2009 @ 12:59 முப | மறுமொழி

 3. //நம்ம ரைட்டர் பேயோன் ///

  ரைட்டு 🙂

  பின்னூட்டம் by ஆயில்யன் — நவம்பர் 18, 2009 @ 12:59 முப | மறுமொழி

 4. ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே 🙂 🙂 🙂

  பின்னூட்டம் by புருனோ — நவம்பர் 18, 2009 @ 1:00 முப | மறுமொழி

  • நன்றி புருனோ. பாடினா மட்டும் பத்தாது. நீங்களும் உங்க கதைகளையெல்லாம் எடுத்து விடுங்க 🙂

   பின்னூட்டம் by விஜய் — நவம்பர் 18, 2009 @ 1:13 முப | மறுமொழி

 5. காலேஜ் படிக்கும்போது கார் வச்சிருந்த பாக்கியசாலியா நீங்க? (காதுல புகை வருது தெரியுதா?)

  நாங்கள்லாம் வெறும் சைக்கிள், பைக்குல ஃபிகருங்க முன்னாடி ‘கட்’டடிச்சு, கீழே விழுந்து வாரின கேசுங்க சாமி.

  பின்னூட்டம் by Sridhar Narayanan — நவம்பர் 18, 2009 @ 1:45 முப | மறுமொழி

  • கார் வச்சிருந்தாதால பெரிசா ஒன்னும் பிரயோஜனம் இல்லை. இந்த மாதிரி தான் ஏதாவது செய்ய முடிஞ்சது. 🙂

   பின்னூட்டம் by விஜய் — நவம்பர் 18, 2009 @ 2:04 முப | மறுமொழி

 6. காலேஜ் சமயத்துல வறப் பட்டிக்காடு பக்கம் அனுப்பீட்டாங்க! ஆனா ஸ்கூல்ல 10-12 பண்ணாத ரகளை இல்லை! கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ஜுக்கு பக்கத்துல இருக்கற பாருக்கு ஸ்கூல் யுனிபார்ம்ல போய் 3 ஃபுல் பீரை மூச்சுவிடாம அடிச்ச அப்பாவிங்க நாங்க!

  மல்லு ஃபிகர்களை கேஜி காம்லெக்ஸ் முன்னால இருக்கற பழமுதிர் நிலையத்துல நிக்கவச்சு எங்க காதுல புகை வர்ற வரை வறுக்கற அந்த டாக்டர் கேங் நீங்கதானா? நாங்க வண்டில போட்ட ’கட்’டெல்லாம் வீணானதே உங்களாலதானா?

  இன்ஜாய் மாடி! பழைய ஞாபகம், அவினாசி தேவதைகள் சாலை இப்பவும் கண்ணுல வருது!!

  பின்னூட்டம் by டைனோ — நவம்பர் 18, 2009 @ 1:55 முப | மறுமொழி

  • //டாக்டர் கேங் நீங்கதானா?//

   அப்படி நடந்திருக்க சாத்தியங்கள் அதிகம் 🙂

   பின்னூட்டம் by விஜய் — நவம்பர் 18, 2009 @ 2:02 முப | மறுமொழி

 7. நீங்களும் கொசுவத்தி சுருளோட தான் வர்றீங்களே.. 🙂
  மேலும் மேலும் சுத்த வாழ்த்துகள்

  பின்னூட்டம் by ராசா — நவம்பர் 18, 2009 @ 9:18 முப | மறுமொழி

  • நன்றி ராசா. 🙂
   அதென்னங்க கொசுவத்திச் சுருள்? எனக்கு புரியலை.

   பின்னூட்டம் by விஜய் — நவம்பர் 18, 2009 @ 10:10 முப | மறுமொழி

 8. சினிமா பார்ப்பதை ஒரு ராணுவ நடவடிக்கைக்குரிய கவனமான திட்டமிடலுடன் நடத்தியது பாராட்டுக்குரியது.

  பின்னூட்டம் by பேயோன் — நவம்பர் 18, 2009 @ 10:26 முப | மறுமொழி

  • நன்றி நண்பரே.
   //ராணுவ நடவடிக்கைக்குரிய கவனமான திட்டமிடலுடன் நடத்தியது//
   திட்டமிட்டதெல்லாம் நண்பிகள்தான். ஆண்கள் எப்பொழுதும் போல் பகடைக் காய்களே!

   பின்னூட்டம் by விஜய் — நவம்பர் 18, 2009 @ 11:17 முப | மறுமொழி

 9. “அப்பவெல்லாம் ஒரு புள்ளைய தள்ளிக்கிட்டு சினிமாவுக்கு வர்றதே பெரிசு.” — grrr…. enaku ippove vayiru yeriyuthu !!! naanum oru dabba car’a ottitu thaan thiriyuren… but, eppo padam ponaalum… car fulla pasanga thaan yeruraanga… he he… but ippovum medical collegela ithe maathiri thaan nadakum… except, instead of gals spending money… pasanga thaan money podrathu… kadan vaangiyaavathu kootitu poraanga… 😀

  பின்னூட்டம் by ArunKumar — நவம்பர் 18, 2009 @ 10:48 முப | மறுமொழி

  • //but ippovum medical collegela ithe maathiri thaan nadakum… except, instead of gals spending money… pasanga thaan money podrathu… kadan vaangiyaavathu kootitu poraanga…//
   உங்க கல்லூரி பசங்க இன்னும் முன்னேறவில்லை என்று தெரிகிறது 😀

   Thanks for the inspiration, Arun.

   பின்னூட்டம் by விஜய் — நவம்பர் 18, 2009 @ 11:20 முப | மறுமொழி

 10. பதிவு நல்லா இருக்கு டாக்டர். பல விஷயங்களை சொல்லி இருக்கிங்க, தங்கமனியிடம் அனுமதி வாங்கியிருப்பிங்கன்னு நினைக்கிறேன் 😉

  பின்னூட்டம் by ravisuga — நவம்பர் 18, 2009 @ 12:33 பிப | மறுமொழி

 11. ஆஹா…அருமையாக இருந்தது …..இப்போது எப்படி செல்கிறீர்கள் திரைப்படம் பார்க்க..????

  பின்னூட்டம் by kuttysamy — நவம்பர் 18, 2009 @ 7:24 பிப | மறுமொழி

 12. நீங்க நல்ல காசு பார்ட்டி மாதிரி தெரியுது 🙂

  நாங்கெல்லாம் காலேஜ் டைம்ல கட் அடிச்சு படம் பார்க்க பஸ்ல(பஸ் பாஸுக்கு நன்றி), டிக்கெட் காசு ரூ.25/- (அதுவும் ஒரு மாசம் பாக்கெட் மணில சேமிச்சு வைத்தது) , ஸ்நாக்ஸ்ஸா – சத்தம் மூச்..பேசப்படாது 😦

  ஆமா ரவி கேட்டா மாதிரி Mrs.Vijayக்கு இதெல்லாம் தெரியுமா..அவங்க இமெயில் ஐடி பிளீஸ் 🙂

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  பின்னூட்டம் by சுவாசிகா — நவம்பர் 18, 2009 @ 8:09 பிப | மறுமொழி

 13. //ச்சே! ச்சே! அப்பிடியெல்லாம் நினைக்கமாட்டோம்! ))

  repeat.

  பின்னூட்டம் by குந்தவை — நவம்பர் 25, 2009 @ 11:28 முப | மறுமொழி

 14. Was watching the movie “eeram” with dude recently. I unfortunately could not relate to any of the flash back details that dude thought were pretty realistic; I must have been an irritating Ms. Goody-two-shoes in my youth. Wondered if I missed something in life !

  பின்னூட்டம் by Lakshmi — திசெம்பர் 4, 2009 @ 6:49 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: