…நிழல்கள்…

நவம்பர் 8, 2009

நிழல்களில் நிஜத்தைத் தேடி…

Filed under: சொந்தக்கதை — Vijay @ 10:10 பிப

பல மாதங்களாக ட்விட்டரில் கஷ்டப்பட்டு எனக்கு தெரிந்த தமிழில் எழுதி தேற்றிக்கொண்ட தைரியத்தில் துவக்கப்பட்ட சோதனை ஓட்டம் இது. ட்விட்டரில் என்னுடைய ஏராளமான எழுத்துப் பிழைகளை கண்டுபிடித்து கிண்டல் செய்து திருத்திய நல்ல உள்ளங்களுக்கு1 (?) முதலில் ஒரு ஈடுகாய் போட்டு சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இங்கேயும் உங்கள் அனைவருக்கும் வேலை நிச்சயமாக உண்டு! 🙂

உனக்கெதற்கு இந்த விஷப் பரிட்சை என்று கேட்பவர்களுக்கு நான் கொடுக்கும் பதில், “Why not?!”

மருத்துவக் கல்லூரியில் என் வகுப்பில் இருந்த பலருக்கு இதுவே தாரக மந்திரம்.

இந்தப் பதிவை எழுத ஆரம்பித்த போது என்னுடைய தமிழ் அறியாமைக்கு ஒரு வரியில் disclaimer போட்டுவிட்டு ஏதாவது எழுதலாம் என்று இருந்தேன். யோசித்து எழுதத் தொடங்கியவுடன், தன்னிலைவிளக்கமே ஒரு பதிவாகப் போட்டுவிடலாமே என்று தோன்றியது. அப்படியே செய்துவிட்டேன்.

பயங்கரமா யோசிச்சு என்னுடைய தரத்திர்க்கப்பாற்பட்ட சூப்பரான (?) தலைப்பை போட்டுவிட்டேன். நிழல்களில் நிஜத்தைத் தேடுவது என் தொழில்.

சில மாதங்களாகவே என்னுடைய (ஆங்கில) மருத்துவ வலைப் பதிவில் எழுத ஒன்றும் தோன்றுவதில்லை.  வேலைச் சுமை அதிகமானதால் நேரமின்மை ஒரு காரணம். அந்தப் பதிவில் பெரும்பாலும் என்னுடைய மருத்துவத் துறை (ரேடியாலஜி – radiology – நுண் கதிரியல் மருத்துவம்) பற்றிய இடுகைகளையே இட்டு வந்தேன். பொழுதுபோக்கிற்கு ஆரம்பித்த பதிவில் வேலை சம்பந்தமாகவே எழுதியதால் ஏற்பட்ட மனச்சோர்வு இன்னொரு காரணம். இவை இரண்டையும்விட முக்கியமான காரணம், ட்விட்டர், ஃபெஸ்புக் போன்ற நுண்பதிவகங்களில் மற்றும் சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்களில் நேரத்தை போக்குவது.

மூன்றாண்டுகளுக்கு முன் என் வலைப் பதிவை ஆரம்பித்தபோது எனக்கென்னவோ மருத்துவத்தை மையமாக வைத்து குறுங்கதைகள் சொல்லவேண்டும் என்று ஒரு ஆவல் இருந்தது. பதிவு எழுதுவதின் மூலம் என்னுடைய படைப்பாற்றலை வளர்திக்கொள்ளலாம் என்று ஒரு நப்பாசையும் இருந்தது. பதிவுலகில் எனக்கு முதலில் பரிச்சயமானவர்கள் பெரும்பாலும் அமெரிக்க மருத்துவப் பதிவர்களே. அவர்களில் சிலரின் எழுத்துத்திரனைக் கண்டு இன்றும் பிரம்மிக்கிறேன். தமிழ் பதிவுலகைப் பற்றித் தெரிந்து கொண்டது ட்விட்டரில் தமிழ் நண்பர்கள் மூலமாகத்தான். இங்கே எழுதிக்கொண்டிருக்கும் ஜாம்பவான்களை திறந்த வாய் மூடாமல் விழி பிதுங்கி இந்த நிமிடம் வரை பார்த்துகொண்டிருக்கிறேன்.

சரி தொழில் பற்றியும் ஆங்கிலத்திலும் எழுத வரவில்லை (அல்லது விருப்பமில்லை) என்றாகிவிட்டதால் தமிழில் ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்ற (விபரீத) எண்ணத்தின் விளைவே இந்த புது முயற்சி. இதுவும் என்னுடைய தமிழ் ட்விட்டர் சோதனை ஓட்டம்போல் சத்தமில்லாமல் செத்துபோகாமல் இருக்க முயற்ச்சிக்கிறேன்.

கண்டிப்பாக ட்விட்டரில் போஸ்டர் ஒட்டி கூவிக் கூவி அழைப்பேன். வந்து பூமாரி பொழியுங்கள் அல்லது அழுகின முட்டையோ தக்காளியோ வீசுங்கள்.

அடிக்குறிப்புகள்:

 1. ட்விட்டரில் என்னுடைய எழுத்துப் பிழைகளை இன்றுவரை திருத்திக் கொண்டிருக்கும் நல்ல உள்ளங்கள் – பாலா, கொத்தனார், ஸ்ரீதர், சொக்கன், டைனோ, ஸ்வாமி, ஆயில்யன், ரவி.  வேறு யாரையாவது விட்டிருந்தால் மறுமொழியில் சொல்லுங்கள், இணைத்துவிடுகிறேன்.
Advertisements

17 பின்னூட்டங்கள் »

 1. வாழ்த்துகள் டாக்டர்..தமிழ் வலை உலகிற்கு உங்களை தாரை தம்பட்டையுடன் அன்புடன் வரவேற்கிறேன் 🙂

  என் வலைபக்கத்திற்கு நமது சீனியர் பாலா சொன்ன
  ”தொடர்ந்து எழுதுங்கள் தமிழில் உங்களை பாதித்தவை, கண்ணோட்டங்கள், நிகழ்வுகள் ஆகியவை பற்றி பேச்சு வழக்கில் சுவாரசியமாக எழுத முயற்சிக்கவும். செந்தமிழும் கைப்பழக்கம் தான்”

  மற்றும் நண்பர் சொக்கனார் கூறிய
  ”இதைத்தான் எழுதவேண்டும் என்றெல்லாம் வரையறை வைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து எழுதிவாருங்கள், அப்புறம் கை தானாக எழுத ஆரம்பித்துவிடும்”

  சொல்லியதையே உங்களுக்கு அப்படியே பார்வர்ட் செய்கிறேன் 🙂

  நான் இன்னும் இந்த தமிழ் வலைவுலகில் ஒரு கைப்புள்ளதான் 😉

  தொடர்ந்து எழுதுங்கள்..படிப்பதற்கு நாங்க இருக்கிறோம்

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  பின்னூட்டம் by சுவாசிகா — நவம்பர் 8, 2009 @ 10:54 பிப | மறுமொழி

  • நன்றி சுவாசிகா. உங்கள் மூலமாக பெரியவர் பாலாவிற்கும் 😉 நண்பர் சொக்கனுக்கும் நன்றி.

   பின்னூட்டம் by விஜய் — நவம்பர் 8, 2009 @ 11:06 பிப | மறுமொழி

 2. வாழ்த்துக்கள் .. தமிழ்ல நல்லாவே எழுதறீங்க 🙂

  மத்தபடி எழுத்துப்பிழைக்கு .. மெல்ல தமிழினி கைகொடுக்கும் 🙂

  பின்னூட்டம் by Vicky — நவம்பர் 8, 2009 @ 10:55 பிப | மறுமொழி

  • நன்றி விக்கி. தமிழ் கைக்கொடுக்கும் என்பது இரண்டாம்பட்சம். ட்விட்டர் நண்பர்கள் (எ.பி. போலீஸ்) கண்டிப்பாக கை மற்றும் கல்லடி கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

   பின்னூட்டம் by விஜய் — நவம்பர் 8, 2009 @ 11:08 பிப | மறுமொழி

 3. உங்களுடைய நிழல்கள் நிஜமாகவே சரியாகத் துவங்கியிருக்கிறது.
  தற்போது ”அவர்” திரைப்படத்தை நான் இயக்கிக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு படைப்பாளியாக அடுத்தது என்ன என்ற கேள்வியும் கூடவே ஓடிக் கொண்டிருக்கிறது.
  //
  மருத்துவத்தை மையமாக வைத்து குறுங்கதைகள் சொல்லவேண்டும் என்று ஒரு ஆவல் இருந்தது.
  //

  இந்த வரிகளைப் படித்தவுடன், நாம் ஏன் மருத்துவத்தை மையமாக வைத்து ஒரு தமிழ் திரைக்கதையை சிந்திக்கக் கூடாது எனத்தோன்றியிருக்கிறது.

  பார்க்கலாம்.

  நிறைய எழுதுங்கள். வாசிக்க காத்திருக்கின்றேன்.

  பின்னூட்டம் by R. Selvakkumar — நவம்பர் 8, 2009 @ 10:58 பிப | மறுமொழி

  • நன்றி செல்வா. மருத்துவக் கதைகள் எழுத முயற்ச்சிக்கிறேன்.

   பின்னூட்டம் by விஜய் — நவம்பர் 8, 2009 @ 11:09 பிப | மறுமொழி

 4. வாழ்த்துக்கள்

  பின்னூட்டம் by புருனோ — நவம்பர் 8, 2009 @ 11:03 பிப | மறுமொழி

  • நன்றி தமிழ் பதிவுலகின் சூப்பர் ஸ்டார் மருத்துவப் பதிவர் அவர்களே 🙂

   பின்னூட்டம் by விஜய் — நவம்பர் 8, 2009 @ 11:10 பிப | மறுமொழி

 5. மனமார்ந்த வாழ்த்துகள் டாக்டர் 🙂 ஓட்டம் தொடரட்டும் 🙂

  – என். சொக்கன்,
  பெங்களூர்.

  பின்னூட்டம் by என். சொக்கன் — நவம்பர் 9, 2009 @ 12:10 முப | மறுமொழி

 6. இம்புட்டு டிஸ்கி போட்டு இருக்கீங்க. அதனால இந்தப் பதிவில் இருக்கும் எபிக்கள் மன்னிக்கப்படுகின்றன. ஒண்ணு பேச்சுத் தமிழில் எழுதுங்க. இல்லை செந்தமிழில் எழுதுங்க. இதில் பாதி அதில் பாதி எல்லாம் கலக்கக்கூடாது!! சிங்கிள் மால்ட்டும் நீட்டாதாம் அடிக்கணும், சுண்டக்கஞ்சியும் ஸ்ட்ரெயிட்டாத்தான் அடிக்கணும். :))

  பின்னூட்டம் by இலவசக்கொத்தனார் — நவம்பர் 9, 2009 @ 3:05 முப | மறுமொழி

  • எனக்குப் புரியும் படியான உவமை கொடுத்ததற்கு நன்றி கொத்தனார் 😀

   பின்னூட்டம் by விஜய் — நவம்பர் 9, 2009 @ 8:04 முப | மறுமொழி

 7. Welcome to Tamil blog world! Wishing you to get maximum number of hits.

  பின்னூட்டம் by Thennarasu — நவம்பர் 9, 2009 @ 10:08 முப | மறுமொழி

  • நன்றி தென்னரசு. படிக்க நிறையப் பேர் வரணும்னா பதிவுல எழுத்து நல்லா இருக்கணும்னு நீங்க சொல்ல வருவது புரிந்தது 😀

   பின்னூட்டம் by விஜய் — நவம்பர் 9, 2009 @ 2:31 பிப | மறுமொழி

 8. […] This post was mentioned on Twitter by Vijay , Arunn. Arunn said: .@scanman <நானும் தமிழில் பதிவு எழுதறேனுங்கோவ் http://bit.ly/2DJ1CR ><< டாக்டர்வாள், வாங்கோ வாங்கோ; நிழல் எதுக்கு நிஜத்துலய வாங்கோ 🙂 […]

  Pingback by Tweets that mention நிழல்களில் நிஜத்தைத் தேடி… « …நிழல்கள்… -- Topsy.com — நவம்பர் 9, 2009 @ 1:04 பிப | மறுமொழி

 9. என்னைப்பாத்து எழுத்துப்பிழை பண்ணா என்ன கண்றாவியா இருக்கும்னு கத்துகிட்டீங்கன்றீங்க… கலக்குங்க டாக்டர்! தமிழில் உங்க தொழில் சம்பந்தமா எழுதுங்க!

  வாழ்த்துகள்!

  பின்னூட்டம் by டைனோ — நவம்பர் 18, 2009 @ 1:49 முப | மறுமொழி

  • நன்றி டைனோ. அடுத்த கதை தொழில் சம்பந்தமானதுதான்.

   பின்னூட்டம் by விஜய் — நவம்பர் 18, 2009 @ 2:05 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: